வெளியேறப்போகும் முஸ்தஃபிசுர் ரஹ்மான்.. சி.எஸ்.கே பிளேயிங் லெவனுக்குள் வரவிருக்கும் இலங்கை வீரர் – விவரம் இதோ

Fizz
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த வேலையில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் நான்கு அணிகள் எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதால் சிஎஸ்கே அணிக்கு பிளேஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இவ்வேளையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தங்கள் விளையாடி உள்ள எட்டு போட்டிகளில் நான்கு வெற்றி மற்றும் நான்கு தோல்விகள் என எட்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக வெற்றிநடை போட்டு வரும் சென்னை அணி கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதோடு வெளி மண்ணில் நடைபெறும் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது.

எனவே இனிவரும் ஆறு போட்டியில் குறைந்தபட்சம் 4 வெற்றிகளையாவது பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாக செயல்படுத்த வந்த வேளையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு சென்னை அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்க்ஷனாவை அணிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 5 ஒய்ட்.. உத்தப்பாவிடம் பிச்சை கேட்டேன்.. 2009இல் மிஸ்ஸான ஆர்சிபி’யின் கோப்பை பற்றி கும்ப்ளே ஆதங்கம்

தோனியின் தலைமையில் தீக்ஷனா சிறப்பாக செயல்பட்டு வந்த வேளையில் ருதுராஜ் அவரை ஓரம் கட்டி வந்தார். இந்நிலையில் கடந்த போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக நிச்சயம் தீக்ஷனா இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement