5 ஒய்ட்.. உத்தப்பாவிடம் பிச்சை கேட்டேன்.. 2009இல் மிஸ்ஸான ஆர்சிபி’யின் கோப்பை பற்றி கும்ப்ளே ஆதங்கம்

Anil Kumble RCB
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் அந்த அணி இம்முறையும் கோப்பையை சந்தேகமாகியுள்ளது. முன்னதாக 2009 ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூரு அணி மாபெரும் ஃபைனலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் 20 ஓவரில் 143/6 ரன்கள் எடுத்தது. குறிப்பாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே 16 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து டெக்கான் அணியை கட்டுப்படுத்தினார். அதைத் தொடர்ந்து சேசிங் பெங்களூருவுக்கு ஜேக் காலிஸ் 15, மனிஷ் பாண்டே 4, வேன் டெர் மெர்வி 32, ராகுல் டிராவிட் 9, ராஸ் டெய்லர் 27, விராட் கோலி 7, மார்க் பவுச்சர் 5, பிரவீன் குமார் 2, வினய் குமார் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மிஸ்ஸான கோப்பை:
அதனால் ஆர்பி சிங் வீசிய கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தை எதிர்கொண்ட அனில் கும்ப்ளே சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை எதிர்ப்புறமிருந்த ராபின் உத்தப்பாவிடம் கொடுத்தார். ஆனால் அப்போது ரன்கள் எடுக்காத உத்தப்பா ஸ்கூப் ஷாட்டை அடிக்க முயற்சித்தார். இருப்பினும் அதை தவறவிட்ட அவர் அனில் கும்ப்ளேவுக்கும் ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் கடைசி வரை 17* (15) ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூரு தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் அந்த ஃபைனலில் ராபின் உத்தப்பாவிடம் ஸ்ட்ரைக்கை கொடுக்குமாறு பிச்சை எடுக்காத குறையாக கேட்டேன் என்று அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அனில் கும்ப்ளே பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியில் நல்ல வாய்ப்பு இருந்தும் தவற விட்டோம். பிரவீன் குமார் 5 ஒய்ட் பந்துகளை வீசியது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது. இருப்பினும் 143 ரன்கள் சேசிங் செய்யக்கூடியது என்பது எனக்கு தெரியும். இப்போதும் ராபின் உத்தப்பாவை நான் பார்க்கும் போதெல்லாம் “நீங்கள் சிக்சர் அடித்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஸ்ட்ரைக்கை எனக்காக கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறுவேன்”

- Advertisement -

இதையும் படிங்க: பாவங்க ஜடேஜாவை விட்ருங்க.. 2024 டி20 உலகக் கோப்பைக்கு இதுக்கும் சம்மந்தம் இல்ல.. பீட்டர்சன் பேட்டி

“அவரிடம் ஸ்கூப் அடிக்காதீர்கள் என்று நான் தொடர்ந்து பிச்சை கேட்டேன். ஆர்பி சிங் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே உத்தப்பா ஸ்கூப் அடிக்க முயற்சித்தார். அடுத்த 2 பந்துகளிலும் ஸ்கூப் அடிக்க முயற்சித்த போது “உத்தப்பா தயவு செய்து எனக்கு ஸ்ட்ரைக்கை கொடுங்கள். நான் பேட்டை சுற்றினால் ஏதாவது நடக்கும்” என்று சொன்னேன். இருப்பினும் கடைசியில் நாங்கள் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம். இங்கிருந்து பார்க்கும் போது இன்னும் ஆர்சிபி கோப்பையை வெல்லவில்லை. எனவே அன்று கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு தவறிப்போனது” என்று கூறினார்.

Advertisement