நேற்றைய போட்டியில் வார்த்தை போரில் ஈடுபட்ட 2 சீனியர் வீரர்கள். ரசிகர்கள் அதிருப்தி – நடந்தது என்ன ?

SRH

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

srhvsdc

அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 50 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு துவக்க வீரர் என ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் இறுதி நேரத்தில் 22 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் அதிரடியாக 42 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 33 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக ரபாடா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் அறிவிக்கப்பட்டார்.

rabada

இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரராக களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இவருக்கும் ரசித் கானுக்கும் இடையே போட்டியின் போது ஒரு சின்ன வார்த்தை போர் நடைபெற்றது. இந்த சண்டை நேற்றைய போட்டியில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ரசித் கான் அவரிடம் சென்று அவர் முகத்தைப் பார்த்து மோசமான வார்த்தைகளில் ஏதோ கத்தினார். இதனை பார்த்த அவர் உடனே கோபமடைந்து எதுவும் செய்யாமல் பேட்டிங் செய்து விட்டு சென்றுவிட்டார். அதேபோன்று ரசித் கான் பேட்டிங் செய்யும் போதும் அவருக்கு எதிராக பௌலிங் செய்து அவரது விக்கெட்டை எடுத்தார் ஸ்டாய்னிஸ்.

rashid

விக்கெட்டை வீழ்த்தியதும் அவரைப் பார்த்து கோபமாக கத்தினார். அதோடு மோசமான வார்த்தையிலும் திட்டினார். தேவையில்லாமல் முதன் முதல் இன்னிங்சில் தன்னை சீண்டிய ரஷீத் கானை இரண்டாவது இன்னிங்சில் ஸ்டாய்னிஸ் பதிலடி கொடுத்தார். இவர்கள் இருவரின் வார்த்தை போர் நேற்று மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.