கடைசி இடத்தை பிடித்தாலும் பவுலிங்கில் அசத்திய ராஜஸ்தான் அணி வீரர் – ரசிகர்கள் கொண்டாடும் சாம்பியன்

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் தொங்கும் போது மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி போன்ற அணிகளுடன் சமமாக கருதப்பட்ட இந்த அணி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்று 14 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 12 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

rr

- Advertisement -

ஐபிஎல் துவக்கத்தில் சஞ்சு சம்சன் ஸ்டீவன், ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட அதனைத் தொடர்ந்து அந்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று கொண்டிருந்தது. அதன் பின்னர் அவர்களிடமிருந்து பெரிதான பங்களிப்பு ஏதும் இல்லை என்பதால் தொடர் தோல்விகளை சந்தித்து இந்த நிலைமைக்கு வந்துவிட்டது.

கடந்த பல வருடங்களாக இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்பது குறிபிடத்தக்கது. ஒரே ஒருமுறை 2008 ஆம் ஆண்டு கோப்பையையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த வருடம் பல வீரர்கள் அந்த அணியில் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் தொடர்ந்து தனது பங்களிப்பை கொடுத்துக் கொண்டே தான் இருந்திருக்கிறார்.

Archer 1

14 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 20 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார். குறிப்பாக ஒருவருக்கு இந்த தொடர் முழுவதும் 6.55 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருக்கிறார்.

Archer

மொத்தம் 55.4 ஓவர்கள் வீசி 365 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தி இருக்கிறார். அதிகபட்சமாக 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது திறமையை நிரூபித்திருக்கிறார் ஜாப்ரா ஆர்ச்சர். இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணி பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் ஆர்ச்சரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement