இந்த வருட ஐபிஎல் தொடர் துவங்கி தற்போது வரை கிட்டத்தட்ட பாதி ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 6 போட்டிகளில் விளையாடி விட்டன. 7 போட்டிகள் முடிந்து விட்டால் தொடரில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். தற்போதைய புள்ளி பட்டியலின் படி மும்பை அணி முதலிடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
யாரும் எதிர்பாராத வகையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் பின்தங்கி உள்ளது. மேலும் சி.எஸ்.கே அணி இந்த வருட பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவதும் சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வருடம் ஐபிஎல் தொடரில் எந்த அணி பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர் பிளே ஒவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. 26 ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இதில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவரில் மட்டும் 36 ரன்கள் எடுக்கும் போது மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த மூன்று விக்கெட்டுகள் சேர்த்து அவர்களை ஓவர்களில் மட்டும் ஹைதராபாத் அணி மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்திலும், டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி நான்காவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.