முதல் போட்டி : சி.எஸ்.கே அணியின் பலம் மற்றும் பலவீனம் என்னென்ன ? – ஒரு முழு அலசல்

csk
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் நூலிழையில் சாம்பியன் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு களம் காண்கிறது. மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி விளையாட உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் என்னென்ன ஆகியவற்றை இந்த பதிவில் விரிவாக காண்போம்.

Dhoni

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இதுவரை தான் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளே-ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. மேலும் எட்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி மூன்று முறை சாம்பியன் பட்டங்களையும், இரண்டு முறை டி20 சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் ஆகவும் வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் அரங்கில் அசைக்க முடியாத அணியாக விளங்கும் தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் ஆரம்பம் முதலே பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வருடத்துக்கான தொடருக்காக தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரு பிரிவிலும் தீவிர பயிற்சி மேற்கொண்டு ஆரவாரமாக களமிறங்க உள்ளார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் வாட்சன் நிதானமாக ஆட்டத்தை கொண்டு சென்று அதிரடியில் அசத்தும் டுபிளேசிஸ் என அசரவைக்கும் துவக்கத்தை சென்னை அணி பெற்றுள்ளது. மேலும் ரெய்னாவிற்கு பதிலாக ராயுடு மூன்றாம் வரிசையில் நம்பிக்கை அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத் தொடர்ந்து தோனி, தோனி துணையாக ஜாதவ் ஆகியோர் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர்.

Watson

பின்வரிசையில் ஆல் ரவுண்டர் ஜடேஜா, பிராவோ, கரண் ஷர்மா என பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இரண்டிலும் அசத்த கூடிய ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக வீசும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் கடைசி ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடிய லுங்கி நெகிடி என வேகப்பந்து வீச்சு பலமாக உள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகங்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் சென்னை அணியில் சுழற்பந்து வீச்சு பட்டாளமே உள்ளது.

- Advertisement -

இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர், ஜடேஜா, பியூஸ் சாவ்லா, கரண் ஷர்மா, சாய் கிஷோர் என ஒரு பட்டாளமே காத்திருக்கிறது. ஹர்பஜன்சிங் இல்லாத வெற்றிடத்தை சாவ்லா நிரப்புவார் என்று தெரிகிறது. இப்படி பல சாதகங்கள் சென்னை அணிக்கு காணப்படுகிறது. ஆனாலும் பலவீனங்களாக சில விடயங்கள் பார்க்கப்படுகின்றன. அது யாதெனில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை சிஎஸ்கே அணிக்காக அடித்த ரெய்னா இத்தொடரில் ஆடவில்லை. அவரிடத்தில் ஆடுபவர் அவரது ஆட்டத்தை நிகர் செய்தாக வேண்டும்.

Chawla

அதுமட்டுமின்றி ஹர்பஜனுக்கு பதிலாக விளையாட வரும் வீரரும் அதனை நிரூபிக்க வேண்டும் இது மட்டுமின்றி சாம் கரன் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் தேசிய அணிக்காக டி20 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை ஆகையால் அவர்களும் இத்தொடரில் அவர்களை நிரூபித்தாக வேண்டும். மேலும் மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணியின் மூத்த வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது. எனவே இந்த விடயங்கள் அனைத்தும் சென்னை அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த இரு சீசன் களை போலவே இந்த சீசனிலும் சென்னை அணி இவற்றையெல்லாம் கடந்து சிங்க நடை போடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement