ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. ஆனா அப்புறம் எப்புடி சத்தம் கேக்குது தெரியமா ? – அதன் பின்னணி இதுதான்

Indian-Fans

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

csk-vs-mi

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

கொரோனா விதிமுறைகளின்படி நடைபெற்ற இந்தப்போட்டியில் ரசிகர்கள் இன்றி வீரர்கள், பயிற்சியாளர்கள், மைதான நிர்வாகிகள் மற்றும் கேமராமேன்கள் ஆகியோருடன் மட்டுமே கொண்டு இப்போட்டி நடைபெற்றது. ஆனாலும் மைதானத்தில் ரசிகர்கள் இருப்பது போன்றும், கை தட்டுவது போன்றும், விசிலடிப்பது போன்ற சத்தங்கள் மைதானத்தில் இருந்தன இது சமூக வளைதளத்தில் ரசிகர்களிடையே ஒரு வித்தியாசமான கேள்வியை எழுப்பியது.

- Advertisement -

அதாவது ஆளில்லாத மைதானத்தில் எவ்வாறு இவ்வளவு சத்தம் கேட்கிறது ? என்பத்தான் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணம் யாதெனில் வீரர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் இல்லை என்ற குறை தெரியக்கூடாது என்பதற்காக விக்கெட் விழும் பொழுதும், பவுண்டரி போகும் போதும், சிக்ஸர் போகும் போதும் மைதானத்தில் ஏற்கனவே ரெக்கார்ட் செய்து வைத்திருந்த சத்தத்தின் மூலம் இந்த விடயம் நடைபெற்றுள்ளது. இதுவே மைதானத்தில் ஏற்பட்ட சத்தத்தின் பின்னணியிலுள்ள சீக்ரெட் ஆகும்.