ஐ.பி.எல் போட்டிகளை மைதானத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் – விவரம் இதோ

CSK-Fans
- Advertisement -

14வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில் இம்முறை துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

IPL

- Advertisement -

முதல் போட்டியில் இன்று சூப்பர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டிகளை மைதானத்தில் நேரில் வந்து கண்டுகளிக்கும் ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் நெறிப்படுத்தி உள்ளது. அதன் படி துபாய் மைதானம் : மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் சான்றிதழ் கொண்டுவரத் தேவையில்லை.

ஆனால் இரண்டு முறை கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அது மட்டுமின்றி சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் மாஸ்க் அணிவது போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோன்று 12 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டாம். ஷார்ஜா மைதானம் : இந்த மைதானத்தை பொருத்தவரை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Dubai

இரண்டு தடுப்பூசியும் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். அபுதாபி மைதானம் : 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 12 முதல் 15 வயது வரை வரும் நபர்களுக்கு தடுப்பூசி அவசியம் இல்லை.

ஆனால் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கொண்டுவரவேண்டும். மேலும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன் வரவேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மைதான நிர்வாகமும் தனித்தனி விதிமுறைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement