முதல் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட இந்த ரூல்ஸ் அனைத்தும் கவனிச்சீங்களா ? – விவரம் இதோ

csk-vs-mi
- Advertisement -

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் இடையே தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதிக செலவாகும் என்பதால் மூன்று மைதானங்களில் மட்டுமே துபாய், சார்ஜா, அபுதாபி என தேர்வு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே முதல் போட்டி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று முடிந்துவிட்டது.

- Advertisement -

மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு விதிகளையும் நடைமுறைகளையும் ஐபிஎல் நிர்வாகம் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக வீரர்களும், பயிற்சியாளர்களும் ஐபிஎல் தொடரில் வேலை செய்ய சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் உயிர் பாதுகாப்பு வளையம் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க வேண்டும். அந்த உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது.

தனியாகத்தான் இருக்க வேண்டும். சமூக இடைவெளி விட்டு நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பல விதிமுறைகள் இருக்கிறது. அதனை தாண்டி கிரிக்கெட் விளையாடினால் இனி இப்படித்தான் விளையாட வேண்டும் என்று ஐசிசி புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. வழக்கம்போல் விக்கெட் விழுந்துவிட்டால் ஒருவரை ஒருவர் கைகளை அடித்துக் கொள்ளக் கூடாது ,கட்டித் தழுவிக் கொள்ள கூடாது, அருகில் நின்று கொண்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தக் கூடாது போன்ற பல விதிமுறைகள் இருக்கிறது.

Curran

இதில் குறிப்பாக அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒன்றுதான் கைகளை அடித்துக் கொள்ளுதல். இந்த விதிமுறைகளை முதல் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சரியாக கடைபிடித்தனர். ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் கைகளை விரல்களை மடக்கி கொண்டு முன்னங்கையை வைத்து அடித்துக் கொண்டனர். இப்படித்தான் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

Dhoni

அதேபோல் போட்டி முடிந்த பின்னரும் பரிசளிப்பு நிகழ்விலும் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆறு அடி சமூக இடைவெளி விட்டு நடந்து கொண்டனர். மேலும் பரிசு காசோலைகளையம் வீரர்களே எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமின்றி டாஸ் போடும்போதும் 6 அடி இடைவெளிவிட்டே அனைவரும் இருந்தனர். இனி தொடர்ந்து நடக்கப்போகும் அனைத்து போட்டிகளிலும் இப்படித்தான் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement