இந்திய அணியில் இருந்து இவங்க 3 பேரையும் தூக்குனா தான் இந்தியா ஜெயிக்கும் – நிபுணர்கள் கருத்து

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெறும் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சிறப்பாக சூப்பர் 12-சுற்றினை அணுகியது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இந்திய அணி பெரிய ஏமாற்றத்தை கண்டது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 152 ரன்களை அடித்து இந்திய அணியை எளிதாக விழுத்தியது.

Hafeez

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் யாரும் ஒரு விக்கெட்டை கூட அந்த போட்டியில் வீழ்த்த முடியவில்லை. இதன் காரணமாக இந்திய அணியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சரியான வீரர்கள் இல்லை என்றும் அதில் சில மாறுதல்கள் செய்தே ஆக வேண்டும் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியில் மூன்று வீரர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணியில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி முதல் வீரராக ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் பாண்டியா தற்போது பந்து வீசாமல் பேட்ஸ்மேனாகவே மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் பேட்டிங்கிலும் அவரால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

thakur 1

இதன் காரணமாக இந்திய அணியில் ஆறாவது பவுலர் வீக்னஸ் உள்ளது இப்போது தெளிவாகி உள்ளது. இதன் காரணமாக தாகூரை அணியில் சேர்ப்பதன் மூலம் ஆறாவது பவுலர் அணிக்கு கிடைப்பார். மேலும் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்று கூறப்படுகிறது. அதே போன்று இரண்டாவது மாற்றமாக பார்ம் அவுட்டில் சிக்கித் தவிக்கும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷான் கிஷனை கூடுதல் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஏனெனில் இஷான் கிஷன் பயிற்சி ஆட்டத்திலும் சரி, ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட போட்டிகளிலும் சரி சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவரை சேத்தது தான் கோலி பண்ண பெரிய தப்பு. இந்திய அணியின் தோல்விக்கு அதுவே காரணம் – இன்சமாம் பேட்டி

அதுதவிர்த்து 3வது வீரராக வருண் சக்கரவர்த்தியை நீக்கிவிட்டு அனுபவம் வாய்ந்த அஷ்வினை அணியில் சேர்த்தால் நிச்சயம் இந்திய அணி பலம் பெறும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மூன்று மாற்றங்களை செய்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement