சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் கேதர் ஜாதவ் தொடர்ந்து பல போட்டிகளில் சொதப்பி வருகிறார். 2018ஆம் ஆண்டு சென்னை அணியில் இணைந்த இவரது ஆட்டம் தற்போது வரை பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இந்த வருட ஐபிஎல் தொடரில் மொத்தமாக 98 ஸ்ட்ரைக் ரோட்டில் 65 ரன்கள் தான் குவிதிருக்கிறார். அவருக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆட வாய்ப்பிருக்கு வீரர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.
முரளி விஜய்
துவக்க வீரரான இவர் முதல் 4 போட்டிகளில் ஆடி சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின்னர் அணியில் இருந்து கழற்றிவிடப்பாடார். தற்போது இவர் மீண்டும் அணிக்குள் வரவேண்டுமானால் கேதர் ஜாதவுக்கு மாற்றாகத்தான் வர முடியும். இவர் துவக்க வீரராக ஆடி பழகியவர். இவர் ஜாதவுக்கு பதில் ஆடவேண்டுமாமல் துவக்க வரேரர் இடத்தில் ஆடும் இருவர் மிடில் ஆடரில் மாறிவிடப் பட வேண்டும்.
ருத்துராஜ் கெய்க்வாட் :
இவர் மஹாராட்டிஸ்ரா பேட்ஸ்மேன் ஆவார். சென்னை அணிக்காக கடந்த 3 வருடங்களாக ஆடி வருகிறார். இந்த வருடம் மிடில் ஆடரில் 3 போட்டியில் ஆடி இருக்கிறார். இவர் கேதர் ஜாதவுக்கு மாற்றாக வர வாய்ப்புள்ளது. இவருக்கு துவக்க வீரருக்கான இடத்தை கொடுத்துவிட்டு தற்போது துவக்க வீரராக இருக்கும் பாப் டு பிளசிஸ் மிடில் ஆடரில் கேதர் ஜாதவ் இடத்தில் ஆடலாம்.
நாராயணன் ஜெகதீசன் :
தமிழக அணியின் துவக்க வீரர் இவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடி வருகிறார். இவருக்கும் கேதர் இடத்தில் ஆட வாய்ப்பு கொடுக்க படலாம். ஏனெனில் கடந்த 3 ஆண்டுலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடத வீரர் இவர் தான்.