காயமடைந்த புவனேஷ்வர் குமார்க்கு பதிலாக இணையவுள்ள அதிரடி ஆட்டக்காரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Bhuvi
- Advertisement -

நடப்பு ஐ.பி.எல் சீசனில் பல வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே சன் ரைசர்ஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான மிச்செல் மார்ஷ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இத் தொடரில் இருந்து துவக்க போட்டிகளிலேயே விலகினார். அதனை தொடர்ந்து தற்போது சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய புவனேஷ்வர் குமார் காயமடைந்தார்.

Bhuvi 1

அந்த போட்டியின் 19-வது ஓவரில் போது காயம் பட்ட புவனேஷ்வர் குமார் அந்த ஓவரின் முதல் பந்தினை வீசிய ஆவர் மீதம் இருந்த பந்துகளை வீசாமல் சென்றுவிட்டார். அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் சரியாகி மீண்டும் திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரின் காயம் தற்போது பெரிதாக காரணத்தினால் அவர் தொடரில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் அணி நிர்வாகம் சார்பில் இருந்து வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து பல மாதங்களாக விலகியிருந்த அவர் தற்போது தான் ஐபிஎல் தொடருக்கு திரும்பியிருந்தார். இந்நிலையில் சிறப்பாக பந்துவீசி வந்து அவருக்கு மீண்டும் இவ்வாறு காயம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு மாற்றாக சன்ரைசர்ஸ் அணியில் இணைய இந்திய வீரர்களில் 3 பேர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

bhuvi

அவர்களில் முதல் நபராக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதானின் பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளது. யூசுப் பதன் 2018 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். இந்த ஆண்டு தொடருக்கான ஏலத்தில் அவரது பெயர் விலை போகவில்லை என்றாலும் மாற்று வீரராக அவர் அணிக்கு அழைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் அதேபோல கர்நாடகாவைச் சேர்ந்த ரோகன் கடம் கர்நாடக ப்ரீமியர் லீக் மூலம் சிறப்பாக விளையாடி திறனை நிரூபித்த அவரையும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று மூன்றாவது வீரராக பவுலராக வினய் குமார் மாற்று பவுலராக ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இவர் பல முறை ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளார்.

Yusuf 1

இவர்கள் மூவரில் யூசப் பதான் சன் ரைசர்ஸ் அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஏனெனில் பந்துவீச்சில் இந்த அணி நல்ல பலத்துடன் இருப்பதால் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்க அதிரடி வீரர் வேண்டும் என்று கருதும் பட்சத்தில் யூசுப் பதான் அணியில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement