- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வியை சந்தித்த இந்திய அணி.. அவர் இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது – விவரம் இதோ

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்து தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறியது.

இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம்? :

ஏற்கனவே இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு ஒன்று (2-1) கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்யலாம் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக மோசமான பார்மில் இருந்த ரோகித் சர்மா இந்த போட்டியில் இருந்து விலகி பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

ஆனாலும் வெற்றிபெற வாய்ப்பிருந்த இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து சில தகவல்களை இங்கு காணலாம். அந்த வகையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 185 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியும் 181 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக 4 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 157 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்த வெற்றி இலக்கை தொட்டு இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில் இருந்தாலும் கேப்டன் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்துவீச முடியாமல் போனது தோல்வியை நோக்கி செல்ல மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி நிர்ணயித்த இந்த 162 ரன்கள் இலக்கு என்பது அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு சற்று கடினமான இலக்காக இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸின்போது பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதிலும் குறிப்பாக இந்த இரண்டாவது இன்னிங்ஸில் முதல் 21 ஓவரை இருவரும் இடைவிடாமல் வீசி நான்கு விகெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதையும் படிங்க : பும்ரா உங்கள மாதிரி சேண்ட்பேப்பரால் ஏமாத்துற ஆள் கிடையாது.. ஆஸ்திரேலிய ரசிகருக்கு அஸ்வின் பதிலடி

இவ்வேளையில் பும்ராவும் இருந்திருந்தால் நிச்சயம் கூடுதலாக சுழற்சி முறையில் பந்துவீசி ஆஸ்திரேலியாவிற்கு அழுத்தத்தை கொடுத்திருக்க முடியும். இப்படி பும்ரா இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியாதது வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டி தோல்வியை சந்திக்க ஒரு காரணமாகவும் அமைந்தது என கூறப்படுகிறது.

- Advertisement -