2008 ஆம் ஆண்டு நாங்கள் தோனியை ஏலம் எடுக்காததற்கு காரணம் இதுதான் – உண்மையை உடைத்த ஆர்.சி.பி நிர்வாகம்

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு துவங்கியது. ஒவ்வொரு பெரிய நகரத்திற்கும் ஒரு அணி என்று கட்டமைக்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரரான தோனி எந்த அணிக்கு செல்வார் என ரசிகர்கள் ஆவலாக பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு என ஐந்து அணிகள் தோனிக்காக போட்டியிட்டது.

csk vs dc

தோனியின் விலை 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஏலம் சென்றுகொண்டே இருந்தது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய பின்னர் பல அணிகள் பின் வாங்கின. அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே போட்டி போட்டது. இறுதியாக சென்னை அணி அவரை 1.5 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தது.

அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோனியை ஏன் கை விட்டது என்பதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அப்போதைய அணியில் நிர்வாக இயக்குனராக இருந்த சாரு சர்மா கூறியதாவது…

csk

2008 ஆம் ஆண்டு ஒரு வீரரை 1.5 மில்லியன் டாலர் செலவு செய்து எடுப்பது என்பது மிகச் சாதாரண காரியமல்ல. தோனி பல சாதனைகளை படைத்து இருக்கிறார். ஆனால் அப்போது அவரை அத்தனை தொகை கொடுத்து எடுத்த பின்னர் சாதிக்க தவறி இருந்தால் எங்களது அணி நிர்வாகம் பெரும் சுமைகளை சந்தித்திருக்கும். சமாளிக்க முடியாத இழப்பு ஏற்பட்டிருக்கும்.

- Advertisement -

CSKShop

ரசிகர்களும் ஒரு வீரருக்கு இவ்வளவு பணத்தை செலவு செய்டவதா என விமர்சனம் செய்து இருப்பார்கள். நாங்கள் இரண்டு புறமும் யோசித்த பின்னரே தோனியை எடுப்பதில் இருந்து பின் வாங்கினோம் என்று கூறியுள்ளார் அவர். ஆனால் தோனி சென்னை அணிக்காக பல எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.