- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக என்ன காரணம்? – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக இடம்பெற முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அவர் பிளேயிங் லெவனில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

அறிமுகமான வருண் சக்ரவர்த்தி :

இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக என்ன காரணம்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தது மட்டுமின்றி தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

- Advertisement -

அதன்காரணமாக அவருக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி தானொரு மிகச் சிறந்த விக்கெட் டேக்கர் என்பதை நிரூபித்தார்.

இப்படி அடுத்தடுத்த டி20 தொடர்களில் அவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே அவரது திறனை பரிசோதிக்கவே ஒருநாள் போட்டிக்கான அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீரம் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சின் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு இந்திய அணியில் தற்போது உள்ள ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விரலை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் வீரர்களாக இருக்கும் வேளையில் வருண் சக்கரவர்த்தி மிஸ்டரி பந்துவீச்சாளராக இருப்பதால் அவரது பந்தை கடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினம் அதன் காரணமாகவும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சச்சின் மற்றும் டிராவிடை கடந்து சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

இதுவரை ஒருநாள் போட்டிகளில் விளையாடாத வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்களை எவ்வாறு வீசப் போகிறார்? என்றும் அப்படி அவரால் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -