இவ்வளவு பாதுகாப்பையும் மீறி வருண் சக்ரவர்த்திக்கு கொரோனா வர இதுதான் காரணமாம் – வெளியான பரபரப்பு தகவல்

Varun
- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் தற்போது வரை 29 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த தொடரானது முதல் கட்டத்தை முடித்து இரண்டாவது கட்டத்தை துவங்கியுள்ள இவ்வேளையில் இன்று நடைபெற இருந்த 30வது லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடி இருந்த கொல்கத்தா அணியை சேர்ந்த இரு வீரர்களுக்கு கோரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

KKRvsRCB

அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்டது எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மட்டுமின்றி இந்த போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் தொற்று எவ்வாறு பரவியது என்பதற்கான தகவல் தற்போது வெளியாகி பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

- Advertisement -

அதன்படி கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பயோ பபுள் வளையத்தை மீறி வெளியே சென்று வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறி மருத்துவமனை சென்று ஸ்கேன் எடுத்து வந்துள்ளார். பின்னர் எந்தவித குவாரன்டைனும் இல்லாமல் அவர் அணியுடன் இணைந்துள்ளார்.

Varun

இதனால் பயோ பபுளை மீறி வெளியே சென்று வந்த போதுதான் இந்த கோரோனோ தொற்றிக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் வருண் சக்கரவர்த்தி இவ்வாறு தனியாக மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்தாரா ? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் அவர் வெளியே சென்று ஸ்கேன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொல்கத்தா அணியில் கொரோனா பரவி இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

varun 1

அதுமட்டுமின்றி கடைசியாக அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி இருந்ததால் டெல்லி அணி வீரர்களும் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒருவேளை டெல்லி அணி வீரர்களும் பாதிக்கப்படும் பட்சத்தில் இந்தத் தொடர் நடைபெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வருண் சக்கரவர்த்தியுடன் சேர்த்து தமிழக வீரரான சந்தீப் வாரியருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement