3 விக்கெட் மட்டுமே இழந்து வலுவாக இருந்த அணி 1 மணி நேரத்திலேயே ஆல் அவுட்டாக – என்ன காரணம்?

Ngidi-1
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே போட்டியாக கடந்த 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து முடித்துள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்து இருந்தது. அதற்கு அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டதால் மூன்றாம் நாளான இன்று மீண்டும் ஆட்டம் துவங்கியது.

rahul

இன்றைய போட்டியில் 122 ரன்களுடன் ராகுலும், 40 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவும் பேட்டிங் செய்ய இறங்கினர். இந்திய அணி 272 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து உள்ளதால் நிச்சயம் பெரிய ரன் குவிப்புக்கு சென்று கிட்டத்தட்ட 400 ரன்களுக்கு மேல் அடித்து முதல் இன்னிங்சில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் மேலும் ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானேவும் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட ஆரம்பித்தன. பின்னர் வந்த பண்ட், அஷ்வின், தாக்கூர், பும்ரா, ஷமி, சிராஜ் என அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியானது 49 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. அதுவும் 90 ஓவர்களில் ஆரம்பித்த போட்டி அடுத்த 15 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

ngidi

இறுதியில் இந்திய அணியானது முதல் விக்கெட்டுக்கு 327 ரன்கள் மட்டுமே குவித்தது. இப்படி வலுவாக இருந்த இந்திய அணி மூன்றாவது நாளில் ஆல் அவுட் ஆக என்ன காரணம் எனில் இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் மூன்றாவது நாள் விரைவாக ரன்களை குவித்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியை கையாண்டனர்.

இதையும் படிங்க : இப்படி பண்ணிட்டோமேன்னு நெனச்சி கோலி கண்டிப்பா டென்ஷன் ஆகியிருப்பாரு – பொல்லாக் ஓபன்டாக்

ஆனால் இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை பெய்ததால் மூன்றாவது நாளில் மைதானத்தில் இருந்த ஈரப்பதத்தினால் மைதானத்தில் பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைத்தது. அதுமட்டுமின்றி பேட்ஸ்மேன்களுக்கு பந்தை அடிப்பதும் அவ்வளவு எளிதாக இல்லை இதன் காரணமாகவே இந்திய அணி வீரர்கள் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை விட்டுள்ளனர். ஆனால் மைதானத்தின் இந்த தன்மை இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கும் உதவும் என்பதால் நிச்சயம் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்காவை விரைவில் சுருட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement