இப்படி பண்ணிட்டோமேன்னு நெனச்சி கோலி கண்டிப்பா டென்ஷன் ஆகியிருப்பாரு – பொல்லாக் ஓபன்டாக்

Pollock
Advertisement

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது.

INDvsRSA

அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெறயிருந்த இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுத்தார். அவரது இந்த மோசமான ஷாட் செலக்சன் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷேன் பொல்லாக் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

kohli 2

விராட் கோலி இந்த போட்டியில் ஆட்டமிழந்த விதம் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில் இந்த போட்டியில் அவர் நல்ல டச்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நிச்சயம் அவர் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தேன். அதுமட்டுமின்றி அவரது கால் நகர்வுகளும் பந்துக்கு ஏற்றாற்போன்று மிக சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : ஆஷஸ் டெஸ்ட் : 4 ஓவர்கள் மட்டும் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸி பவுலர் – இங்கி படுமோசமான தோல்வி

35 ரன்கள் அடித்து நன்றாக செட்டாகி இருந்த வேளையில் தேவையில்லாத ஒரு பந்தில் அவர் எளிதாக ஆட்டமிழந்து வெளியேறியதால் நிச்சயம் தப்பு செய்துவிட்டோம் என்று எண்ணி ஹோட்டல் அறையில் அவர் வருந்தி இருப்பார் என பொல்லாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement