டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடத்தமுடியாமல் போனதற்கு இதுவே காரணம் – பி.சி.சி.ஐ விளக்கம்

Jay-shah
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் ஆனது தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவலை நேற்று மாலை பிசிசிஐ சார்பில் தலைவர் கங்குலி அறிவித்தார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்த முடியாததற்கான காரணத்தை மின்னஞ்சல் மூலம் பி.சி.சி.ஐ வெளியிட்டு உள்ளது. அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது : கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்று நாம் கடந்த சில மாதங்களாக பார்த்துள்ளோம்.

எனவே டி20 உலகக்கோப்பையை இங்கு நடத்தும் வாய்ப்பு நம்மை விட்டு செல்ல துவங்கியது. அதுமட்டுமின்றி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தாக்கம் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது இந்தியாவில் நம்மால் டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாமல் சென்றுவிட்டது.

Dubai

வீரர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தத் தொடரை சரியான முறையில் எந்தவித தடங்கலும் இன்றி நடத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இத்தொடரை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தை நாங்கள் கூட்டம் அமைத்து முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் இத்தொடரை நாங்கள் நடத்த முயற்சிகளை மேற்கொண்டாலும் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த தொடர் திட்டமிட்டபடி இங்கு நடத்த முடியாத காரணத்தினால் இந்த தொடரின் நன்மையை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த இடமாற்றத்தை முடிவு செய்துள்ளோம்.

இது எங்களை பொறுத்தவரை சரியான முடிவு தான் என்று பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று மைதானங்களில் இந்த டி20 உலக கோப்பை தொடர் ஆனது 30 போட்டிகளாக நடத்தப்படவுள்ளது. அக்டோபர் மாதம் 17ஆம் தேதி துவங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த தொடர் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement