சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட என்ன காரணம் தெரியுமா ? – விவரம் இதோ

Samson

இந்திய கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் துவங்க உள்ள டி20 தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ஏற்கனவே உலக கோப்பை தொடருடன் கேப்டன் கோலி தனது பதவியிலிருந்து விலகி உள்ளதால் தற்போது புதிய கேப்டனாக அணியில் ரோகித் சர்மா செயல்பட இருக்கிறார். அவரது தலைமையில் தற்போது பல இளம் வீரர்களை கொண்ட அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது.

indvsnz

அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ஜடேஜா, பும்ரா மற்றும் ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டிவரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு என்ன காரணம் என்ற விவரத்தை தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 117 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வரும் இவரால் சர்வதேசப் போட்டிகளில் சரியான அளவில் சிறப்பாக விளையாட முடியவில்லை.

samson 1

அதிலும் குறிப்பாக கடைசியாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சஞ்சு சாம்சன் அந்த டி20 தொடரிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இளம் வீரர்களுக்கு பலருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட மற்றொரு காரணமும் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விளையாடியது வெறும் 10 போட்டிகள். இந்திய வீரருக்கு அடித்த அதிஷ்டம் – நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த இளம்வீரர்

அதாவது அணியில் ஏற்கனவே ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், இஷான் கிஷன் என மூன்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இருப்பதன் காரணத்தினாலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நிறைய திறமை இருந்தும், அதிரடியாக விளையாடும் வீரராக இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது சற்று வருத்தமான விடயம் தான்.

Advertisement