விளையாடியது வெறும் 10 போட்டிகள். இந்திய வீரருக்கு அடித்த அதிஷ்டம் – நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த இளம்வீரர்

Venkatesh-iyer
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றுடன் வெளியேறியது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் வரும் 17ஆம் தேதி துவங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொடரில் ஏற்கனவே பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

indvsnz

- Advertisement -

அந்த வகையில் இளம் வீரரான கொல்கத்தா அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் வெறும் 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் 370 ரன்கள் குவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி 3 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். நிச்சயம் பாண்டியாவிற்கு அடுத்த வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அவர் அணியில் இடம் பெறுவார் என்ற காரணத்தினால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Venkatesh-iyer-3
Venkatsh KKR

பாண்டியாவிற்கு பதிலாக வாய்ப்பினை பெற்றுள்ள வெங்கடேஷ் ஐயர் நிச்சயம் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக மாற்று வீரராக அவர் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement