தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடாதது ஏன் – வெளியான உண்மை தகவல்

Ruturaj
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு தற்போது முதற்கட்டமாக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரிலும் விளையாடும் என்பதனால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டர்பன் நகரில் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் போட்டி நாளான அன்று மழை பெய்ததன் காரணமாக டாஸ் கூட போடப்படாமல் முதலாவது டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது டிசம்பர் 12-ஆம் தேதி இன்று செயின்ட் ஜார்ஜ் ஃபார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாடும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் களமிறங்கியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது. ஏனெனில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக ருதுராஜ் செயல்பட்டார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 123 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இப்படி இருக்க இந்த போட்டியில் அவர் நீக்கப்பட்டது ஏன்? என்கிற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் இது குறித்த உண்மையான தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : அசத்திய சூரியகுமார்.. 9 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. மைதான கண்ணாடியை அடித்து நொறுக்கி.. இந்தியாவை காப்பாற்றிய ரிங்கு சிங்

அதன்படி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறுகிய அளவிலான பயிற்சியை மேற்கொண்ட வேளையில் தென் ஆப்பிரிக்க நாட்டின் தட்பவெப்ப நிலை ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு செட்டாக வில்லை என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் கிளைமேட் செட்டாக வில்லை என்பதனால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இப்படி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாகவே அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை என்கிற உண்மையான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement