போதும் வாங்கனு சொல்லி ரோஹித் சர்மா டிக்ளேர் கொடுத்ததே இதுக்குதான் – இந்திய அணி தரமான சம்பவம்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்டநேரத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்ததபோது பெய்த கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

டிக்ளேர் கொடுத்தது ஏன்? :

அதனை தொடர்ந்து இந்த போட்டியில் இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்ற வேளையில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 34.4 ஓவர்களிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்திருந்த வேளையில் டிக்ளர் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

நான்காம் நாளான இன்று இந்திய அணி கடைசி விக்கெட் விழும் வரை விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒன்பதாவது விக்கெட் விழுந்ததுமே ரோகித் சர்மா அதிரடியாக டிக்ளர் முடிவை அறிவித்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால் :

- Advertisement -

பத்தாவது விக்கெட் இருக்கு கூடுதலாக 10, 20 ரன்களை சேர்ப்பதை விட வங்கதேச அணியை ஒரு 10 ஓவர்கள் விளையாட வைத்து சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று ரோகித் சர்மா முடிவெடுத்தார். அதன்படியே இன்றைய ஆட்ட நேரத்தில் 52 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி 11 ஓவர்கள் பந்துவீசி இரண்டு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியது.

இதையும் படிங்க : 8.22 ரன்ரேட்.. பஸ்பாலை ஊதித்தள்ளிய இந்தியா.. ஆஸியை முந்தி 147 வருடத்தில் யாரும் செய்யாத உலக சாதனை

தற்போது 26 ரன்கள் எடுத்திருக்கும் வங்கதேச அணி நாளை 26 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாட இருக்கிறது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் விரைவில் மீதமுள்ள விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டு இந்திய அணி சேசிங் செய்து வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement