ரிஷி தவான் இந்த வித்தியாசமான கந்தசாமி மாஸ்க் அணிந்து விளையாட இதுதான் காரணமாம் – சுவாரசிய தகவல் இதோ

Rishi
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 187 ரன்களை குவிக்க அடுத்ததாக 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 176 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்காரணமாக 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தற்போது சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் ஆறு தோல்வியை சந்தித்துள்ளது.

PBKS vs CSK Rishi Dhawan

- Advertisement -

இதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பும் தற்போது சென்னை அணிக்கு மங்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்த விடயமாக ரிஷி தவான் அணிந்திருந்த முககவசம் பார்க்கப்பட்டது. ஏனெனில் பொதுவாக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் மற்றும் அம்பயர்கள் என ஒருசிலரே பந்து எளிதாக தங்களைத் தாக்கி விடும் என்று இதுபோன்று ஹெல்மெட் அணிவது வழக்கம்.

ஆனால் வித்தியாசமாக இந்த போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் முகக்கவசம் அணிந்து விளையாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் அவர் ஏன் அவ்வாறு அந்த வகையான முககவசத்தை பயன்படுத்துகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரஞ்சி தொடரில் இமாச்சல பிரதேச அணிக்காக தலைமை தாங்கி விளையாடி வரும் ரிஷி தவான் நடைபெற்று முடிந்த ரஞ்சி கோப்பையில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பந்துவீசுகையில் பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரது முகத்தில் பலமாக தாக்கி இருக்கிறது.

rishi 1

அதன் காரணமாக அவருக்கு மூக்கு பகுதியில் எலும்பு முடிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. இதன்காரணமாக இனிமேலும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்றும் அந்த காயம் மீண்டும் பெரிதாக கூடாது என்பதற்காகவும் இவ்வகையான முக கவசத்தை அவர் ஒரு முன்னெச்சரிக்கையாக அணிந்து விளையாடி உள்ளார். அவர் பந்து வீச வரும்போது இந்த முக கவசம் குறித்தே அனைவரும் பேசினர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவர் முன்னெச்சரிக்கை காரணமாகவே இதனை பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட துவங்கிய ரிஷி தவான் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த ஒரு அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.

இதையும் படிங்க : ஆயிரம் சொல்லுங்க, ஷாஹீன் அப்ரிடியை விட பும்ரா தரத்தில் குறைந்தவர் தான் – முன்னாள் பாக் வீரர் கருத்து

பின்னர் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று முடிந்த ரஞ்சி தொடரில் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷி தவான் அவரது அணி சாம்பியன் பட்டம் வெல்ல தனது சிறப்பான பங்களிப்பினை வழங்கி அசத்தினார். இதன் காரணமாக ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் அணியால் 55 லட்ச ரூபாய்க்கு அவர் வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement