சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல.. ப்ரித்வி ஷா நீக்கப்பட இதுதான் காரணம் – மும்பை வாரியம் தகவல்

Prithvi-Shaw
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒழுக்கமின்மை காரணமாக மும்பை மாநில அணியில் இருந்து துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா நீக்கப்படுவதாக அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மும்பை அணியில் இருந்து வெளியேறி வேறுமாநில அணிக்காக அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் ஒரு வாய்ப்பாக சையத் முஷ்டாக் அலி தொடருக்கான மும்பை அணியில் அவருக்கு மும்பை அணி இடம் கொடுத்திருந்தது.

அவர் நீக்கப்பட்டதற்கு அவரே தான் காரணம் :

ஆனால் அந்த தொடரிலும் ப்ரித்வி ஷா பெரிய அளவில் ரன்களை சேர்க்காதது மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் எதிர்வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து அவரை நீக்கி மும்பை மாநில அரசு அதிரடி காட்டியிருந்தது.

- Advertisement -

இப்படி தான் மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு “இன்னும் எவ்வளவு ரன்கள் தான் அடிக்க வேண்டும்? இதெல்லாம் பார்க்க மாட்டீர்களா கடவுளே!” என ப்ரிதிவி ஷா தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் ப்ரித்வி ஷா மும்பை மாநில அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் :

ப்ரித்வி ஷா வேண்டுமென்றே ஒன்றும் மும்பை அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருடைய செயல்கள் தான் அவரது நீக்கத்திற்கான மிக முக்கிய காரணம். பீல்டிங் செய்யும்போது பந்து அவருக்கு அருகில் வந்தால் கூட அதை பிடிப்பதற்கான முயற்சியை அவர் செய்வதில்லை. பேட்டிங்கிலும் பந்தை எட்டி அடிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகிறார். அவருடைய உடற்தகுதி, ஒழுக்கமின்மை, அணுகுமுறை எல்லாமே மிகவும் குறைவாக இருக்கிறது.

- Advertisement -

இதுபோன்ற அலட்சியமான வீரரை அணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே நீக்கினோம். சமூக வலைதள பதிவுகள் மூலமோ, தேர்வாளர்களை திசை திருப்புவதன் மூலமோ மீண்டும் அவரை அணியில் இணைத்து விட முடியாது. ஆட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டுவர அவர் முயற்சி செய்ய வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது.

இதையும் படிங்க : 5 தான் முக்கியமா? ஸ்மித் விக்கெட்டை மறந்து அஸ்வினை குறைச்சு எடை போட்டு ரிட்டையராக வெச்சுட்டிங்களே.. புஜாரா

சையது முஷ்டாக் அலி தொடரின் போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்பாடு செய்த மீட்டிங்குகளில் அவர் அமரவில்லை. அதேபோன்று நாங்கள் அவருக்காக ஏற்பாடு செய்த உடற்தகுதி மீட்டிங்குகளிலும் அவர் அமரவில்லை. இப்படி தொடர்ச்சியாக அனைவரையும் உதாசீனப்படுத்திவரும் அவரை இனி மாநில அணிக்காக விளையாட வைக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுத்ததாக அந்த நிர்வாகி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement