நேற்றைய போட்டியில் இரு அணிவீரர்களும் ரெட் கேப் அணிய காரணம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

red-cap
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்றைய 2-வது ஆவது போட்டியில் மேலும் ரன் குவிப்பை தொடர்ந்த இந்திய அணியானது 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Rahul-1

- Advertisement -

அதிகபட்சமாக ராகுல் 129 ரன்களையும், கோலி 42 ரன்களையும், ஜடேஜா 40 ரன்கள் சேர்த்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் குவித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் இந்திய அணியை விட அவர்கள் 250 ரன்கள் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று 2-வது நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் வீரர்கள், போட்டி வர்ணனையாளர்கள், நடுவர்கள் என அனைவருமே சிகப்பு நிற தொப்பியை அணிந்து மைதானத்திற்கு வந்தனர். வழக்கமாக தாங்கள் அணியும் தொப்பியை தவிர்த்து இதுபோன்ற ரெட் தொப்பியை அணிந்து வர காரணம் என்ன என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழத் துவங்கின.

red cap 2

இந்நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி அந்த விவரம் யாதெனில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரு ஸ்டார்ஸ் மனைவி ரூத் ஸ்டார்ஸ் நுரையீரல் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் நினைவாக தற்போது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கேன்சர் பவுண்டேஷன் உருவாக்கி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார்.

red cap 1

இந்த அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையிலும், மரியாதை கொடுக்கும் வகையிலுமே நேற்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பியை அணிந்து விளையாட முடிவு எடுத்தனர். இதில் இந்திய வீரர்களும் பங்கேற்றது மிகச்சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement