சூப்பர் ஓவரில் பொல்லார்ட் மற்றும் பாண்டியா ஜோடி விளையாட காரணம் இதுதான் – ரோஹித் வெளிப்படை

Ishan
Advertisement

மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் 10 ஆவது லீக் போட்டியில் 202 ரன்களை சேசிங் செய்து விளையாடிய முமபை அணி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இளம் வீரர் இஷான் கிஷன் மற்றும் அனுபவ வீரரான பொல்லார்ட் ஆகியோர் சாத்தியமற்ற போட்டியை இறுதியில் “டை” ஆக்கினார்கள். இவர்கள் இருவரும் 119 பாட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறப்பாக விளையாடி 99 ரன்களை குவித்த இஷான் கிஷன் மற்றும் 60 ரன்களை அதிரடியாக குவித்த பொல்லார்ட் ஆகியோர் சூப்பர் ஓவரில் களம் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் மாறாக பொல்லார்ட் உடன் ஹார்டிக் பாண்டியா சூப்பர் ஓவரில் விளையாட வந்தார்.

- Advertisement -

அந்த சூப்பர் ஓவரை பெங்களூர் அணி சார்பாக சைனி வீச அந்த ஓவரில் இந்த ஜோடி சோபிக்க தவறியது. சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த பொல்லார்ட் 4 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் சூப்பர் ஓவர் முடிவில் மும்பை அணி 7 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 8 ரன்கள் அடித்து போட்டியை பெங்களூர் அணி எளிதில் வென்றது.

Pollard 1

இந்நிலையில் இந்த முக்கியமான சூப்பர் ஓவரில் இஷான் கிஷன் புத்துணர்ச்சியோடு இல்லை என்றும் அவர் டயர்டாக காணப்பட்டதால் சூப்பர் ஓவரில் அவர் இறங்கவில்லை என்று ரோஹித் குறிப்பிட்டார். அதேபோன்று பாண்டியா மற்றும் பொல்லார்ட் இறங்கியதற்கான காரணத்தையும் ரோஹித் போட்டி முடிந்து கூறினார். அதன்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் களமிறங்க தயாரானார்.

Pandya 1

பாண்டியா ஒரு பவர் ஹிட்டர் என்பது நமக்கு தெரியும். அவரால் மிகப்பெரிய சிக்சர்களை அடிக்க முடியும் என்ற காரணத்தினாலும் இஷன் கிஷன் தயாராக இல்லை என்ற காரணத்தினாலும் பாண்டியா மற்றும் பொல்லார்டை சூப்பர் ஓவரில் விளையாட அனுமதித்ததாக ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement