நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தேவ்தத் படிக்கல் விளையாடாததற்கு காரணம் தெரியுமா ? – கோலி கொடுத்த விளக்கம்

padikkal

ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

RcbvsMi-1

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் 48 ரன்களையும், மேக்ஸ்வெல் 39 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோன்று இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்று ஒரு மோசமான சாதனையை சந்தித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் முன்னணி துவக்க வீரரான படிக்கல் விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் கடந்த முறை பெங்களூர் அணிக்காக அறிமுகமான அவர் அந்த தொடரில் 473 ரன்களை குவித்தது மட்டுமின்றி பெங்களூர் அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் துவக்க வீரராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று அவர் போட்டியில் களம் இறங்கவில்லை.

Padikkal 3

அதற்கு காரணம் என்னவென்று தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகளவு கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணம் யாதெனில் படிக்கல் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் இந்த தொடருக்கு தயாராகும்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை முடிந்து நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகும் இன்னும் படிக்கல் அணியில் இணையவில்லை இதுகுறித்து பேசிய கேப்டன் விராட்கோலி கூறுகையில் :

- Advertisement -

தற்போது தான் அவர் தொற்றிலிருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளதால் போதிய பயிற்சி இன்மை காரணமாகவே அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை என்று தெரிவித்தார். மேலும் தற்போதுதான் அவர் சிகிச்சை முடிந்து வந்துள்ளதால் அவருக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேண்டும் என்ற காரணத்தினால் அவர் சேர்க்கப்படவில்லை என்று கோலி தெளிவாக எடுத்துக் கூறினார். இதன் காரணமாக அடுத்த புதன்கிழமை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் படிக்கல் நிச்சயம் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.