
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நேற்று நவம்பர் 24-ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஏலத்தின் முதல் பாதி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் போட்டி போட்டு தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி வாங்கினர்.
பெரிய பெரிய வீரர்களுக்காக பல்வேறு அணிகளும் போட்டி போட்ட வேளையில் சில தமிழக வீரர்களும் பெரிய தொகைக்கு இந்த ஏலத்தில் விற்கப்பட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் 10 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற பெரிய தொகைப்பு வாங்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அந்த அணியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் 11 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டபோது அவரைவிட ஒரு கோடிக்கு குறைவாக இரண்டாவது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக நடராஜனை வாங்க என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அந்த அணியில் இருந்து வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக முன்னாள் இந்திய வீரரும், தமிழக கிரிக்கெட்ருமான ஹேமங் பதானி டெல்லி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே டிஎன்பிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் இருக்கிறது.
இதன்காரணமாக தமிழக வீரர்களின் முழு விவரமும் அவருக்கு தெரியும். அதனால் தான் நடராஜனின் மீது உள்ள திறமையை நம்பி அவரே நடராஜனை டெல்லி அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் நிச்சயம் ஸ்டார்க் மற்றும் நடராஜனை வைத்து பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதனாலேயே அவர்கள் இருவரையும் பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்க ஹேமங் பதானி முக்கிய காரணியாக திகழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா பத்தி குறையே சொல்ல முடியாது.. மும்பையில் இருந்தபடியே ஸ்கெட்ச் போட்ட ஹிட்மேன் – வெளியான தகவல்
அதோடு டெல்லி அணியின் பந்துவீச்சை பலப்படுத்தினால் நிச்சயம் அந்த அணியின் இருக்கும் பேட்ஸ்மேன்களை வைத்து அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதனாலே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.