நடராஜனின் ஜெர்சியில் உள்ள ஜே.பி என்ற வார்த்தைகளுக்கு பின் இருக்கும் அர்த்தம் – விவரம் இதோ

Nattu
- Advertisement -

சேலம் சின்னப்பம்பட்டி சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தங்கராசு தற்போது உலக கிரிக்கெட்டை உற்றுப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார். சேலத்தில் இருந்து வந்த ஒரு வீரன் அற்புதமாக சர்வதேச வீரர்களை விக்கெட் வீழ்த்தியது தமிழக ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இந்திய ரசிகர்களையம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

srh

குறிப்பாக அவரது துல்லியமான யார்க்கர்கள் பல சர்வதேச வீரர்களை திக்குமுக்காட வைத்து மைதானத்திலேயே டான்ஸ் ஆட வைத்துள்ளது. அந்த அளவிற்கு அற்புதமாக பந்துவீசி கொண்டிருக்கிறார் தங்கராசு நடராஜன். இவர் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு போட்டியில் தொடர்ந்து 7 யார்க்கர் பந்துகளை வீசி உலக கிரிக்கெட்டின் கவனத்தைப் பெற்றார்

- Advertisement -

அவரது ஜெர்சி பின்புறம் ஜேபி நட்டு என்ற ஒரு பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த பெயர் யாருடையது என்று தற்போது தெரியவந்துள்ளது. முதன்முதலாக டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடி வந்தார் நடராஜன். அப்போது அவருக்கு திறமை அதிகம் ஆனால் சரியான வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் .

ஜெயப்பிரகாஷ் என்ற ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் இவரைப் பார்த்து உடனடியாக இவரை தமிழக அளவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் அவரை வீட்டிலிருந்து அழைத்து வந்து முறையான கிரிக்கெட் பயிற்சி மற்றும் அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்தவர் ஜெய்பிரகாஷ் தான். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக நடராஜன் தனது பெயருக்கு முன்னால் ஜேபி என்ற ஒரு வாசகத்தை வைத்து இருக்கிறார்.

natarajan

இந்த உண்மை தற்போது வெளிவந்து இருக்கிறது. மேலும் நடராஜன் போன்ற பல திறமையான இளம் வீரர்கள் நமது தமிழக கிராமங்களில் கொட்டி கிடைக்கிறார்கள். அவர்களது திறமையை வெளிக்கொண்டு வந்து உலகிற்கு அறியச் செய்ய வேண்டும் என்று தமிழக ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசத் தொடங்கிவிட்டனர்.

Advertisement