ஐ.பி.எல் தொடரின் 9 ஆவது அணியை வாங்கப்போகிறாரா மோகன் லால் ? – இறுதிபோட்டியை பார்க்க துபாய் வர காரணம் என்ன ?

Mohan-lal
- Advertisement -

13வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று விட்டது. டெல்லி அணியை எதிர்த்து ஆடிய அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி விட்டது. இத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. ரசிகர்கள் இல்லையென்றாலும் முக்கிய நிர்வாகிகள் இந்த போட்டியில் நேரடியாக கலந்துகொண்டு போட்டியை கண்டுகளித்தனர்.

கொரோனோ அச்சம் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள், அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிசிசிஐ சார்ந்த நிர்வாகிகள், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் நிர்வாகிகள் என முக்கிய நபர்களுக்கு மட்டுமே மைதானத்தில் போட்டியை நேரடியாக காண அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது.

- Advertisement -

mi

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் நேரில் பார்த்தது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை எழுப்பி உள்ளது. மேலும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படும் ஒன்பதாவது அணியை வாங்க போகிறார் என்று கூட ஒரு தகவல் சமூக வலைதளத்தில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி வெளியான அந்த தகவல் முற்றிலும் பொய்யானது.

Mohan lal 2

ஏனெனில் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்த பின்னரே பிசிசிஐ சார்பாக ஒன்பதாவது அணி அடுத்த ஆண்டு இணையும் என்ற ஒரு செய்தி வெளியானது. அதுமட்டுமின்றி அகமதாபாத் தளமாகக் கொண்டு உருவாக இருக்கும் அந்த புதிய அணியை வாங்க பல பெரிய புள்ளிகள் போட்டி போடுவார்கள் என்றும் அவர்களிடையே மோகன்லால் பங்கேற்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்லால் அந்த போட்டியை நேரில் ஏன் காண வந்தார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

Mohan lal 1

கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த பல மாதங்களாக தொடர் ஊரடங்கு இருந்ததால் அவர் தற்போது ஓய்வுக்காக குடும்பத்துடன் துபாய் வந்து இருப்பதாகவும் அதனால் தற்போது போட்டி அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவர் நேரில் கண்டுரசித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுவே அதன் உண்மை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement