முகமது ஷமி இந்திய டி20 அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட இந்த – 3 விடயங்கள் தான் காரணமாம்

shami
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 60 டெஸ்ட் போட்டிகள், 82 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் முகமது ஷமி 32 வயதை மட்டுமே எட்டிய வேளையில் தற்போதைய அவருக்கு டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.

Shami-1

- Advertisement -

அதோடு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி முகமது ஷமியை இந்திய அணியின் நிர்வாகம் தொடர்ந்து ஓரங்கட்டி வருகிறது. இப்படி அசத்தலான திறமை உடைய முகமது ஷமியை இந்திய அணி நிராகரிக்க மூன்று முக்கிய காரணங்கள் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அந்த காரணத்தை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

1) உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நீக்கம் : கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பங்கேற்று விளையாடி இருந்த முகமது ஷமி அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனாலும் அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை .மேலும் கடந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு பெரிய அளவில் அவர் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் எதுவும் விளையாடவில்லை.

Shami

2) எக்கனாமி 10 : புதுப்பந்தில் மிகச் சிறப்பாக ஸ்விங் செய்து வீசும் முகமது ஷமி விக்கெட்டுகளை எடுத்தாலும் பந்து சற்று பழையதாகி விட்டால் அவருக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக தற்போது அவரது டி20 பவுலிங் எக்கனாமி கிட்டத்தட்ட 10 நெருங்கியுள்ளது.

- Advertisement -

இப்படி ஓவருக்கு 10 ரன்கள் வரை அவரது பவுலிங்கில் ரன்கள் கசிவதாலும் அவர் ஓரங்கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 3) டெத் ஓவர் சொதப்பல் : முகமது ஷமியின் பலமே துவக்க ஓவர்களில் பந்து வீசுவதுதான். பவர்பிளே ஓவர்களில் அற்புதமாக பந்துவீசும் முகமது ஷமி டெத் ஓவர்கள் என்று வந்துவிட்டால் மிகவும் ரன்களை வழங்கும் வீரராக மாறிவிடுகிறார். அதன் காரணமாகவும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அவர் ஒருத்தர் மனசு வச்சா போதும். தினேஷ் கார்த்திக், பண்ட் 2 பேரும் பிளேயிங் லெவன்ல ஆடலாம் – நடக்குமா?

இப்படி முகமது ஷமி நிராகரிக்கப்பட பல காரணங்கள் இருந்தாலும் தற்போதைக்கு இந்திய அணி அடுத்த கட்ட இளம் வீரர்களை தயார் செய்து வருவதால் உங்களுக்கு வாய்ப்பு தர முடியவில்லை என்று ஏற்கனவே முகமது ஷமியிடம் நேரடியாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement