அவர் ஒருத்தர் மனசு வச்சா போதும். தினேஷ் கார்த்திக், பண்ட் 2 பேரும் பிளேயிங் லெவன்ல ஆடலாம் – நடக்குமா?

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த டி20 உலக கோப்பையை வென்றாக வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணியும் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.

IND

- Advertisement -

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரிலாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்திய அணியின் சமீபத்திய சொதப்பலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பந்து வீச்சு தான். ஏனெனில் இப்போது இருக்கும் இந்திய அணியில் சரியான பவுலிங் காம்பினேஷன் அமையவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.

அதேபோன்று அணியில் இடம்பெறும் பவுலர்களாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை தான் விளையாட வைக்க முடியும் என்ற நிலையும் நீடித்து வருகிறது. தினேஷ் கார்த்திக் ஒரு சிறப்பான பினிஷராக சிறப்பாக விளையாடி வருவதால் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க முடியாமல் இருந்து வருகிறது.

Hardik Pandya 1

அதே வேளையில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படும் போது தினேஷ் கார்த்திக் வெளியேற்றப்படுகிறார். இப்படி இந்த இருவரில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்திய அணியில் மாறி மாறி விளையாடி வருகின்றனர். ஆனால் அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி அது ஹார்டிக் பாண்டியா நினைத்தால் மட்டுமே நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட்டிங் செய்வதோடு, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறமையும் உடையவர். சமீப காலமாகவே பவுலிங்கில் மெல்ல மெல்ல ஆர்வம் காட்டி வரும் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் ஒருவேளை நான்கு ஓவர்களையும் மொத்தமாக வீசினால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக அவரை பயன்படுத்திக் கொண்டு அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை இணைக்கலாம்.

இதையும் படிங்க : காசே வேண்டாம், நான் வந்து கோச்சிங் பண்றேன் – ஆசிய கோப்பை தோல்வியால் பாக் ஜாம்பவான் அதிரடி கோரிக்கை

அப்படி இணைக்கும் போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் ஒன்றாக விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதே வேளையில் ஹார்டிக் பாண்டியா நான்கு ஓவர்களையும் முழுமையாக வீசும் போது அவரது பந்துவீச்சில் பெரிய அளவில் ரன்கள் கசியாமல் அவர் பார்த்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

Advertisement