காசே வேண்டாம், நான் வந்து கோச்சிங் பண்றேன் – ஆசிய கோப்பை தோல்வியால் பாக் ஜாம்பவான் அதிரடி கோரிக்கை

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan
- Advertisement -

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற முடிந்த 2022 ஆசிய கோப்பையை யாருமே எதிர்பாராத வகையில் தரவரிசை 8வது இடத்தில் உள்ள இலங்கை இளம் வீரர்களை வைத்து அற்புதமாக செயல்பட்டு கோப்பையை வென்றது. மறுபுறம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறிய நிலையில் 2 ஆசிய கோப்பைகளை வென்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி காயத்தால் விலகியதால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த அந்த அணி இந்தியாவுக்கு எதிராக தோல்வியுடன் இந்த தொடரை துவங்கியது.

SL vs PAK

- Advertisement -

ஆனால் ஹாங்காங்கை புரட்டி எடுத்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை போராடி தோற்கடித்து பைனலுக்கு முன்னோட்டமாக இலங்கைக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் தோல்வியடைந்தது. இருப்பினும் பைனலுக்கு தகுதி பெற்ற அந்த அணி டாஸ் வென்றால் 99% வெற்றி உறுதி என்ற துபாய் மைதானத்தில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் ஆரம்பத்திலேயே அற்புதமாக பந்துவீசி 58/5 என இலங்கையை மடக்கி பிடித்தும் அதன் பின் ரன்களை வாரி வழங்கியது. அதை தொடர்ந்து 171 ரன்களை துரத்துகையில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களை வைத்திருந்தும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய அந்த அணி வெறும் 147 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.

சொதப்பிய பாகிஸ்தான்:
குறிப்பாக வெற்றிக்கு சிறப்பாக செயல்பட வேண்டிய கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் அவுட்டான நிலையில் அதனால் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய நங்கூரத்தை போட்டு மெதுவாக பேட்டிங் செய்த உலகின் ஒன் டி20 பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செட்டிலானப் பின் அதிரடியை துவக்காமல் கடைசி வரை 49 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து பொறுமையாகவே விளையாடியது தோல்வியை பரிசளித்தது. அத்துடன் 58/5 என திணறிய இலங்கையை மேற்கொண்டு 100+ ரன்கள் எடுக்கும் அளவுக்கு பந்து வீச்சு மோசமாக இருந்ததும் மற்றும் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததும் பாகிஸ்தான் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடுப்பாக வைத்தது.

Pak Shadab Khan

மொத்தத்தில் இந்தியாவைப் போலவே தங்களது 2வது வீடாக கருதப்படும் துபாயில் ஆசிய கோப்பையை வெல்ல முடியாத பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்ற கலக்கம் அந்நாட்டவர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் தோல்வியை பார்த்து தாங்க முடியாத முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜாவித் மியான்தத் வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்காக காசு எதுவும் கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் இலங்கையிடம் தோற்ற தோல்வியைப் பார்த்து தன்னை போன்றவரால் வீட்டில் அமர்ந்திருக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை போன்றவர்கள் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இங்கே அமர்ந்துள்ளோம். எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுக்கு பணம் தேவையில்லை. பாகிஸ்தான் வீரர்கள் என்னுடைய ஆலோசனைகளால் பயனடைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் தோல்வியடைந்த விதம் எனக்கு வேதனையை கொடுக்கிறது. சொல்லப்போனால் இந்த தோல்வி அவமானமாகும். உங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கும் போதும் அவர்களை பயன்படுத்தாத உங்களது தேசியவாதம் எங்கே?”

Javed

“ஒருவேளை ஆசிய கோப்பையில் நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் விக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு அதிரடியை சீராக துவக்குங்கள் என்று கூறியிருப்பேன். என்னிடம் அனுபவம் உள்ளது. ஆனால் இந்த இளம் வீரர்களிடம் அனுபவம் இல்லை. அவர்கள் களத்திற்கு சென்றதுமே அதிரடியை துவங்கி அவுட்டாகி வருகிறார்கள். அவர்களுக்கு எந்த பவுலரை எப்போது அடிக்க வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்கள் தெரியாமல் இருக்கிறது” என்று கூறினார்.

முன்னதாக இதே போல் சோயப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆசிய கோப்பை தோல்விக்கு பாகிஸ்தான் அணி நிர்வாகத்தைச் சாடினர். அதற்கு வெளியில் இருப்பவர்களுக்கு அணியில் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாது என தற்போதைய பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் அதிரடியான பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement