ரசிகர்களின் கனவுக்கன்னி மாயந்தி லாங்கர் இந்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவில்லை – காரணம் இதுதான்

Mayanti-langer
- Advertisement -

ஐபிஎல் போட்டிகள் துவங்கும் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அந்த போட்டி குறித்த தொகுப்பாளர்களின் பேச்சுகள் துவங்கிவிடும். தொகுப்பாளர்களின் பேச்சுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. ஏனெனில் போட்டியில் விளையாடும் இரு அணிகள் வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை தொகுப்பாளர்கள் ரசிகர்களுக்கு முன்வைப்பார்கள். மேலும் ஐபிஎல் போட்டிக்கு அதிக அளவில் தொகுப்பாளர்கள் உண்டு.

mayanti 1

- Advertisement -

ஆனால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அடையாளம் காணப்பட்டவர்கள் என்றால் அதில் சிலரே இருக்கின்றனர். அந்த சிலரில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியான மாயந்தி லாங்கர் கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளர் என இரண்டு பிரிவிலும் அசத்த கூடியவர். அவரது பேச்சை காண ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகை அல்ல.

ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்தும் அவர் அனுபவம் உள்ளவர். மேலும் ஆட்டங்களுக்கு இடையே மைதானத்தில் அவர் வீரர்களுடன் நடத்தும் நேர்காணல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஐபிஎல் தொகுப்பாளர்கள் பட்டியலில் மாயந்தி லாங்கர் பெயர் இடம்பெறவில்லை.

mayanti

இதனால் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு ? அவர் ஏன் இந்த தொடரில் இடம் பெறவில்லை ? இந்த தொடர் முழுவதும் அவர் வரமாட்டாரா ? என்ற பல கேள்விகளை சமூகவலைதளத்தில் முன் வைத்திருந்தனர். மேலும் அத்துடன் இதற்கான காரணம் எங்களுக்கு வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாயந்தி லாங்கர் அவர் ட்விட்டர் பக்கத்தில் மூலம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதாவது தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே தான் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றும் இனி வரும் சீசன்களில் தான் பங்கேற்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவர் ஸ்டுவர்ட் பின்னி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது மட்டுமின்றி லைக்ஸ்களையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement