ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜஸ்டின் லாங்கர் விலக – இதுதான் காரணமாம்

Langer
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்கும் முன்னர் ஆஸ்திரேலிய அணி சற்று பரிதாபமான நிலையில் இருந்தது என்றே கூறலாம். ஏனெனில் 90-களின் இறுதியிலும் 2000-மாவது ஆண்டுகளின் துவக்கத்திலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணி 2015ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதன் பிறகு சற்று சறுக்கலை சந்தித்தது.

langer

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தபோது அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஜஸ்டின் லாங்கர் அனைத்தையும் சரி செய்து வீரர்களுக்கு இடையே ஒற்றுமையை கொண்டுவந்து அணியை பலப்படுத்தினார். அதோடு ஆஸ்திரேலிய அணியை மீண்டும் பலமுள்ள அணியாக மாற்றி கிரிக்கெட் உலகில் நிற்க வைத்த லாங்கர் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பையையும் ஆஸ்திரேலிய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கிலும் ஆஸ்திரேலிய அணி வென்று காட்ட அணியுடன் உறுதுணையாக இருந்தார். இப்படி ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அவர் திடீரென தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Langer 1

மேலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள வேளையில் அவர் பதவி விலகி உள்ளது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. இந்நிலையில் இப்படி ஆஸ்திரேலிய அணியில் இருந்து திடீரென ஜஸ்டின் லாங்கர் வெளியேற என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணியில் உள்ள சில வீரர்களுக்கு ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக செயல்படுவது பிடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

மேலும் வீரர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே ஜஸ்டின் லாங்கர் தனது பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பாண்டிக்கும் ஆஸ்திரேலிய நிர்வாகம் பயிற்சியாளர் லாங்கரை நடத்திய விதம் சங்கடம் கொடுப்பதாக அறிவித்திருந்தார். மேலும் முன்னாள் வீரர்கள் ஹைடன், மிட்செல் ஜான்சன் கூட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை ஆதரித்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கர், அசாருதீன் சாதனைகளை முந்தப்போகும் ஹிட்மேன்

இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் அவரது பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வென்று இருக்ககூட வாய்ப்பு உள்ள வேளையில் அவரை முறைப்படி நடத்தாமல் விட்டதாலேயே அவர் மனம் நொந்து ராஜினாமா செய்துள்ளார் என்றும் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர். அடுத்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி அங்கும் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement