வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கர், அசாருதீன் சாதனைகளை முந்தப்போகும் ஹிட்மேன்

Rohith
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் துவங்கும் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ரசிகர்கள் அனுமதியின்றி காலி மைதனாத்தில் நடைபெற உள்ளது.

rohith

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்த இந்தியாவும் கிரண் பொல்லார்ட் தலைமையில் ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் போன்ற அதிரடி வீரர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த தொடருக்காக இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்திய அணியில் ஹிட்மேன்:
இந்த தொடருக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து திரும்பியுள்ள ரோகித் சர்மா இந்தியாவின் முழு நேர வெள்ளை பந்து கேப்டனாக முதல் முறையாக செயல்பட உள்ளார். கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா இல்லாத நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்திய அந்த அணி 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவிற்கு படுமோசமான ஒயிட்வாஷ் தோல்விகளுக்கு படுமோசமான ஒயிட்வாஷ் தோல்வியை பரிசளித்தது.

Rohith

அந்த தொடரில் விராட் கோலி உள்ளிட்ட பலம் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தபோதிலும் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் போனதால் இந்திய ரசிகர்கள் கடும் வேதனைக்கு உள்ளானார்கள். இருப்பினும் தற்போது இந்திய அணிக்கு ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.

- Advertisement -

புதிய சிக்ஸர் சாதனை:
இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு சில முக்கிய மைல்கல் சாதனைகளை ரோகித் சர்மா படைக்க உள்ளார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 227 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா அதில் 244 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.

Rohith

எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இன்னும் 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 250 சிக்சர்களை பறக்கவிட்ட முதல் இந்திய வீரர்” என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த 2வது இந்திய பேட்டராக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 229 சிக்ஸர்களுடன் உள்ளார்.

சச்சின், அசாருதீனை முந்தி:
இது மட்டுமல்லாமல் இந்த ஒருநாள் தொடரில் இன்னும் அவர் இன்னும் 51 ரன்களை எடுத்தால் “ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய பேட்டர்” என்ற முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி புதிய சாதனை படைப்பார். வெஸ்ட்இண்டீஸ் எதிராக இதுவரை ரோகித் சர்மா 1523 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். எனவே இன்னும் 51 ரன்களை எடுத்தால் 1573 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரை முந்தி புதிய சாதனையை படைப்பார்.

Azharuddin

அத்துடன் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 179 ரன்களை விளாசும் பட்சத்தில் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 6வது இந்திய பேட்டர்” என்ற முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனை முந்தி புதிய சாதனையை படைப்பார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர் : 18426 ரன்கள்
2. விராட் கோலி : 12285 ரன்கள்
3. சௌரவ் கங்குலி : 11221 ரன்கள்
4. ராகுல் டிராவிட் : 10768 ரன்கள்
5. எம்எஸ் தோனி : 10599 ரன்கள்
6. முஹம்மது அசாருதீன் : 9378 ரன்கள்
7. ரோஹித் சர்மா : 9205* ரன்கள்

Advertisement