- Advertisement -
இந்திய கிரிக்கெட்

20 வயதிலேயே கோலி இந்திய அணியில் இடம்பெற இந்த ஒரு ஆட்டம் தான் காரணம் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

விராட் கோலி 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை பெற்றுக் கொடுத்தவர். அவருடைய வேட்கை அதனுடன் நிற்கவில்லை. அதற்குப் பிறகு எப்படியாவது இந்திய அணியில் இடம் பிடித்து சாதிக்க வேண்டும் என்று தீயாய்பறந்து கொண்டிருந்தார்.

விராட் கோலியின் காலகட்டத்தில் இந்திய தேர்வு குழு தலைவராக இருந்தவர் திலிப் வெங்சர்க்கார். தற்போது விராட் கோலியை தான் எந்த போட்டியை பார்த்து தேர்ந்தெடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியது…

2008 ஆம் ஆண்டு நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தபோது இந்திய எமர்ஜிங் இளைஞர்கள் கொண்ட அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி கொண்டிருந்தது. இந்த அணியை நான்தான் தேர்வு செய்தேன். 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி தொடர் இது. இதன் காரணமாக 20 வயது விராட் கோலியை இந்த அணியில் தேர்வு செய்தேன்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில்அந்த அணி 250 ரன் எடுத்தது. இந்த போட்டியில் விராட் கோலி துவக்க வீரராக இறங்கி 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

அந்த போட்டியில் சதம் அடித்து விட்டோம் என்று நிறுத்திவிடாமல் போட்டி முடியும் வரை களத்தில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆடிக்கொண்டிருந்தார் விராட் கோலி. விராட் கோலியின் இந்த அணுகுமுறை என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த அளவிற்கு அப்போதே சேசிங் செய்யும்போது முதிர்ச்சியுடன் ஆடினார் விராட் கோலி.

இந்த தொடரில் 5 போட்டிகளில் ஆடி 204 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியை பார்த்துதான் விராட் கோலியை இந்திய அணியில் தேர்வு செய்தேன் என்று கூறுகிறார் இந்த வெங்கசர்க்கார். அதன்பின்னர் தற்போதுவரை கோலியின் சேசிங் வேட்டை நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by