சென்னை அணிக்கெதிரான போட்டியில் இஷாந்த் சர்மா விளையாடாததற்கான காரணம் இதுதான் – அணி நிர்வாகம் அறிவிப்பு

Ishanth
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு வீரர்களை 7 ரன்களில் இருந்த சென்னை அணி மொயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அது ஆட்டத்தால் மீண்டும் சிறப்பான பாதைக்குத் திரும்பியது.

Pant

- Advertisement -

பின்னர் ராயுடு, ஜடேஜா, சாம் கரன் என அனைவரும் கைகொடுக்க 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் என்ற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும், மொயின் அலி 36 ரன்களும் குவித்தனர். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது குறிப்பாக துவக்க வீரர்கள் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் எளிதாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

ishanth 2

இந்நிலையில் நேற்றைய சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரபாடா மற்றும் நோர்க்கியா ஆகியோர் குவாரன்டைனில் இருந்ததால் அவர்களால் விளையாட முடியவில்லை. அதே வேளையில் இந்திய அணியின் வீரர்களான இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவும் விளையாடவில்லை அவர்களுக்கு பதிலாக நேற்றைய போட்டியில் ஆவேஷ் கான் விளையாடினார். இந்நிலையில் இசாந்த் சர்மா ஏன் விளையாடவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நிர்வாகம் தரப்பில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி வெளியான தகவலில் : இஷாந்த் ஷர்மா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு திரும்பி மீண்டும் டெல்லி அணியின் பயிற்சிக்கு திரும்பிய போது பயிற்சியில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ளார் என்றும் இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பார் என்றும் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement