ஐ.பி.எல் தொடரின் தற்காலிக நிறுத்தத்திற்கு சி.எஸ்.கே அணி விளையாடிய ஒரு மேட்சும் காரணமா ? – வெளியான பின்னணி

cskvsmi
- Advertisement -

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் நமக்கு இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கான விடயமான இந்த ஐபிஎல் தொடரும் தற்போது வீரர்கள் மத்தியில் பெருகி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரானது சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின்னால் சிஎஸ்கே அணி விளையாடிய போட்டி ஒன்றும் முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி போட்டியில் மும்பை அணி பொல்லார்டின் அதிரடி காரணமாக வென்றிருந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பௌலிங் கோச் ஆக இருந்த தமிழக வீரரான பாலாஜி போட்டிகளின் இடையே வீரர்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சரியாக இரண்டு நாட்களில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விதிமுறைப்படி அவருடன் இணைந்திருந்த சிஎஸ்கே அணியும் ஒட்டுமொத்தமாக ஆறு நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். அதேபோன்று சிஎஸ்கே அணியோடு விளையாடிய மும்பை அணியும் ஆறு நாட்கள் வரை தனிமைப்படுத்த வேண்டும்.

bumrah 1

இந்த இரண்டு முக்கிய அணிகளையும் ஆறு நாட்கள் வரை தனிமைப் படுத்தினால் அவர்கள் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட முடியாமல் போகும். அதனால் இந்த போட்டி அட்டவணையில் மாறுதலுக்கு உண்டாகும். அதுமட்டுமின்றி போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும் இதன் காரணமாகவே முழுத் தொடரையும் ரத்துசெய்ய யோசித்திருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. மேலும் அதேபோன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

அந்தப் போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கொல்கத்தா மற்றும் டெல்லி அணி வீரர்களும் ஆறுநாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் யோசித்து தான் பிசிசிஐ இந்த தொடரை தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement