கொரோனா மட்டுமல்ல ஐ.பி.எல் தொடர் தள்ளி வைக்கப்பட்டதுக்கு இப்படி ஒரு காரணமும் இருக்காம் – விவரம் இதோ

IPL-1
- Advertisement -

இந்தியாவில் பதின்மூன்றாவது சீசனாக ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ம் தேதி முதல் துவங்கும் என்று ஏற்கனவே போட்டி அட்டவணைகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு போட்டிகள் தடைபட்டு உள்ளன.

IPL

- Advertisement -

இந்நிலையில் இந்த கொடூர வைரஸ் தீவிரத்தின் காரணமாக பிசிசிஐ ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளது. மேலும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் இந்த வைரஸ் கட்டுக்குள் வந்தால் மட்டுமே இந்தத் தொடர் இந்த ஆண்டு நடைபெறும் என்றும் இல்லையென்றால் இந்த ஆண்டு தொடரை நடத்த வாய்ப்பு இல்லாமல் போகும்.

மேலும் இந்த ஆண்டு நடத்தப்பட முடியாமல் போனால் அடுத்த ஆண்டு 13 ஆவது சீசன் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏப்ரல் 10ஆம் தேதி கிடைக்கப்பெறும் என்று தெரிகிறது. மேலும் சர்வதேச போட்டிகள் பெருமளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.

Ground-Dharamsala

அதுமட்டுமின்றி தற்போது ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது காரணமாக கொரோனா முக்கிய பங்கு வகித்தாலும் இன்னும் சில காரணங்களையும் பிசிசிஐ ஆராய்ந்து பார்த்துள்ளது. அதன்படி வெளிநாட்டு வீரர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை விசா கிடைக்காது என்ற காரணத்தினாலும் மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் தங்களது மைதானத்தில் போட்டிகளை நடத்த கூடாது என்பதாலும் இந்த தொடரை பி.சி.சி.ஐ ஒத்திவைத்து.

- Advertisement -

ஏனெனில் பார்வையாளர்கள், வெளிநாட்டு வீரர்கள் ஆகியோர் இல்லையெனில் தொடரில் சுவாரசியம் குறையும் அதுமட்டுமின்றி இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனால் பெருமளவு பண இழப்பு ஏற்படும். அது ஒரு பக்கம் இருந்தாலும் மக்களின் நலனே முக்கியம் என்று இந்திய அரசாங்கமும் பி.சி.சி.ஐ நினைவில் கொண்டு இந்தத் தொடரை ஒத்தி வைத்தது.

CskvsMi

அது மட்டுமின்றி தேவைப்பட்டால் இந்த வருட தொடரை ரத்து செய்யவும் தயங்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.சி.சி.ஐ யின் இந்த முடிவினால் ரசிகர்கள் சற்று வருத்தம் அடைந்தாலும் இது இதுபோன்ற சூழ்நிலைகளில் நிச்சயம் இது நல்ல முடிவு என்றும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement