சில பிளேயர்ஸ் 2 கேப் 2 கூலர்ஸ் போட்டு விளையாடுறத கண்டிப்பா பாத்திருப்பீங்க – அதன் பின்னால் இருக்கும் காரணம் தெரியுமா ?

Cap

கொரனோ ஏற்படுத்திய பெரும் அச்சுறுத்தலுக்கு பிறகு சர்வதேச அளவில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக எந்த ஒரு தொடரும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு 13 வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்தத் தொடருக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மிகவும் கண்டிப்பான வகையில் பல விதிமுறைகளுக்கு இடையே இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

Dubai

உலக அளவில் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையிலும் எந்த ஒரு தளர்வுகளையும் ஏற்படுத்தாமல் சரியான முறையிலேயே இந்த ஐபிஎல் தொடர் பயணித்து வருகிறது. மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பல்வேறு விஷயங்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் தடை போட்டுள்ளது. அந்த வகையில் ஆடுகளத்தில் கேப்டன்கள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுக்க கூடாது என்றும் அவர்கள் கையை மடக்கி ஒட்டிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. அதேபோன்று வீரர்கள் யாரும் கட்டியணைக்க கூடாது, பந்தில் எச்சில் தடவக் கூடாது என பல்வேறு முன்னெச்சரிக்கை விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளன.

அது மட்டுமின்றி டாஸ் போடும்போது கூட 6 அடி இடைவெளியில் விட்டே இரு அணிகளின் கேப்டன்கள் நிற்க வேண்டும். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளை போட்டுக்கொண்டு சில வீரர்கள் விளையாடுகின்றனர். அதே போன்று சில வீரர்கள் இரண்டு சன் கிளாசையும் போட்டுக்கொண்டு விளையாடுகின்றனர். இதற்கான காரணம் யாதெனில் :

- Advertisement -

dcvsrr

சன்கிளாஸ், தொப்பி, டவல் என எதையும் அம்பயரிடம் வீரர்கள் கொடுக்கக்கூடாது. சக வீரர்களிடம் கொடுத்து அதனை பத்திரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பயோ பபுள் வளையத்தில் இருக்கும் வீரர்கள் அவர்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதால் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.