இவங்க இல்லனா இந்திய அணிக்கு இந்த நிலைமை தான். தொடரின் தோல்விக்கு இதுவே காரணம் – விவரம் இதோ

Ind
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆனது. இதன்மூலம் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அடைந்த தோல்விக்கு தற்போது ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒருநாள் தொடரில் ஏன் இந்த சறுக்கல் என்ற கேள்வியும் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணி குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Rahul

- Advertisement -

இந்நிலையில் இந்த தோல்வி குறித்த காரணங்களும் தற்போது வெளிவந்துள்ளன. பொதுவாக டி20 தொடரை பொறுத்தவரை குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டி என்பதால் அதிரடியான ஆட்டம் தேவைப்படுகிறது. அதனால் எந்த அணியும் பயம் அறியாமல் விளையாடி வெற்றியை பெற முடியும் அதேபோல் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி பயமில்லாத அணியாக திகழ்கிறது.

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரை தவிர மற்ற அனைவருமே இளம் வீரர்களாக இருக்கின்றனர். மேலும் இந்த மூன்று பேர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் வெளிநாட்டு மைதானங்களில் அனுபவம் இல்லாதவர்கள் என்பதனால் நியூசிலாந்தை இந்திய அணியால் சமாளிக்க முடியவில்லை என்ற காரணமும் வெளியாகியுள்ளது. மேலும் ஒருநாள் தொடரில் ஒரு பவுலர் 10 ஓவர்கள் வரை வீசக்கூடும்.

Jadeja 1

அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்கள் 50 ஓவரும் விளையாட வேண்டும் இதற்கு சரியான அனுபவம் தேவை. இந்திய அணியின் தூண்களான ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் அணியில் இல்லை. எனவே வெளிநாட்டு மைதானங்களில் நடைபெறும் இது போன்ற பெரிய தொடர்களில் இளம் வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரால் துவக்க வீரர்கள் இடத்தை நிரப்ப முடியவில்லை.

- Advertisement -

Shaw

அது மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்கும் கோலியும் இந்த தொடரில் தடுமாற்றம் கண்டார். அவர் இடத்தினை கேஎல் ராகுல் நிரப்பினாலும் அதற்கேற்றவாறு மொத்த அணியாலும் கை கொடுக்க முடியவில்லை. மேலும் சீனியர் வீரர்கள் களத்தில் இல்லை என்றால் இந்திய அணிக்கு தோல்வி உறுதி என்று பளிச்சென்று இந்த தொடரில் தெரிந்தது.

அது மட்டுமின்றி பந்து வீச்சிலும் முக்கிய வீரராக திகழும் பும்ரா இந்த தொடரில் சோபிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அனைத்து விஷயங்களும் இந்திய அணி இந்த தொடரில் தோல்வி அடைந்தது முக்கிய காரணம் என்று ரசிகர்கள் இணையத்தில் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அடிக்கடி அணியில் மாற்றத்தை செய்வதை விடுத்து ஒரு நிலையான அணியை உருவாக்க வேண்டும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement