இன்னும் சி.எஸ்.கே அணியில் இம்ரான் தாஹீர் விளையாடாதது ஏன் தெரியுமா ? – விவரம் இதோ

Tahir
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக திகழ்ந்தவர் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜொலித்தவர் இம்ரான் தாஹிர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தொடர்ந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வருகிறார். சர்வதேச அளவில் சிறப்பான பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரிலும் அசத்தி இருந்தும் இந்த ஆண்டு அவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பதற்கான காரணங்கள் சில இருக்கின்றன.

முதலில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்ற காரணத்தினாலேயே அவர் வாய்ப்பை இழந்தார். ஏனெனில் துவக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேசிஸ் அதுமட்டுமின்றி ஆல்-ரவுண்டராக பிராவோ, சாம் கரன் ஆகியோரை சென்னை அணி நீக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இவர்கள் நால்வரும் அணியில் சரியாக செட் ஆகி உள்ளனர்.

Tahir

அதே நேரத்தில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சும் கொஞ்சம் செட் ஆகி இருக்கிறது. பியூஸ் சாவ்லா சரியாக வீசவில்லை என்றாலும் கரண் சர்மா சிறப்பாக வீசி வருகிறார். ஒரு பக்கம் ஜடேஜாவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இம்ரான் தாகிர் அணிக்குள் கொண்டு வருவது கடினமாக உள்ளது. மேலும் ஒருவேளை வெளிநாட்டு சுழல் பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வந்தால் நல்லது என்று கருதினால் நிச்சயம் சான்ட்னருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

Santner

ஏனெனில் அவர் பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளர். எனவே இத்தொடரில் தாஹீருக்கு இதுவரை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 55 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தாஹிர் 79 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற்ற கரீபியன் லீக் தொடரில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement