லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஹார்டிக் பாண்டியா ஏன் விளையாடவில்லை? – சூரியகுமார் யாதவ் விளக்கம்

SKY and Pandya
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக கேப்டன் ஹார்டிக் பாண்டியா பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறியது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. அதோடு டிரெண்ட் போல்ட்டும் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் நேற்றைய போட்டியில் விளையாடியிருந்தனர்.

ஹார்டிக் பாண்டியா விளையாடாதது ஏன்? : சூரியகுமார் யாதவ் விளக்கம்

ஏற்கனவே மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த வேளையில் ஹார்டிக் பாண்டியாவின் தனிப்பட்ட பார்மும் மிக மோசமாக இருந்து வந்ததால் அவரது ஆட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்தன. அதோடு மும்பை அணியில் கேப்டன்சி மாற்றமும் தேவை என்று பலரும் பேசி வந்த வேளையில் நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

அப்படி விளையாடிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்யாசத்தில் லக்னோ அணியை வீழ்த்திய வேளையில் நேற்றைய போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா ஏன் விளையாடவில்லை? என்பது குறித்த தகவலை கேப்டன் சூர்யகுமார் யாதவ் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா விளையாடாததற்கு காரணம் : அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பே காரணம். அவரது காயம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரியவில்லை. அதனால் அவர் எப்போது மீண்டும் அணிக்குள் வருவார்? என்பதும் எங்களுக்கு தெரியாது. இருப்பினும் அடுத்த போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதினால் நிச்சயம் அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்று தான் நம்புவதாக சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியை பின்னுக்கு தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி – நிகழ்த்திய சாதனை

ஏற்கனவே சூரியகுமார் யாதவ் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை வெளியேற்றிவிட்டு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்திற்கு ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement