இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கடந்த பல ஆண்டுகாலமாக இந்திய அணிக்காக விளையாடி வந்து தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்படி அஸ்வின் திடீரென ஓய்வினை அறிவித்ததற்கு அவரைத் தாண்டி பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே காரணம் என்று பேசப்பட்டது.
கம்பீர் வாஷிங்டன் சுந்தரை சப்போர்ட் பண்ண இதுதான் காரணம் :
அதேபோன்று அஸ்வினும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தரை கௌதம் கம்பீர் அதிகளவு ஆதரித்து தொடர்ந்து வாய்ப்பினை அளிக்க என்ன காரணம்? என்பது குறித்து தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாகவே சில கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
பேட்டிங் செய்யும் திறன் படைத்த வாஷிங்டன் சுந்தர் கடந்து சில மாதங்களாகவே டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான இந்திய அணியிலும் தொடர்ந்து இடம்பிடித்து விளையாடி வருகிறார். மேலும் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து உள்ளார்.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை இப்படி கம்பீர் ஆதரிக்க என்ன காரணம்? என்பது குறித்து பேசியிருந்த அஸ்வின் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மீது கம்பீர் அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளார். அவரை ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணியில் விளையாட வைக்க முடியும் என்பதனாலே கம்பீர் அவரை ஆதரித்து வருகிறார்.
அதோடு போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப வாஷிங்க்டன் சுந்தரை பின் வரிசையிலோ, மிடில் ஆர்டரிலோ, டாப் ஆர்டரிலோ எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய வைக்க முடியும். அதேபோன்று அவர் பிளேயிங் லெவனில் இருந்தால் கூடுதலாக ஒரு பவுலரும் அணிக்கு கிடைப்பார்கள் என்பதாலேயே கம்பீர் அவரை ஆதரித்து வருகிறார்.
இதையும் படிங்க : இவங்க 2 பேரும் நல்லா விளையாடுனா தான் துபாயில் இந்திய அணி ஜெயிக்கும் – முகமது கைப் கருத்து
நான் ஒருதலைபட்சமாக பேசவில்லை ஆனாலும் வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் தான் அவரை பிளேயிங் லெவனில் இடம்பெற வைக்க மிக முக்கியமான காரணமாக மாறியுள்ளது. கம்பீரும் அவரது பேட்டிங் திறன் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்துள்ளதாலேயே கம்பீர் தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவு வழங்கி வருவதாக அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



