இவங்க 2 பேரும் நல்லா விளையாடுனா தான் துபாயில் இந்திய அணி ஜெயிக்கும் – முகமது கைப் கருத்து

kaif
- Advertisement -

கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது லீக் சுற்று போட்டியிலிருந்து அரையிறுதி சுற்று வரை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியானது தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது இருந்தாலும் ஆஸ்திரேலியாக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டது.

இவங்க 2 பேரும் தான் நல்லா விளையாடனும் :

அதனை தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. ஆனால் கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது எதிர்வரும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

- Advertisement -

அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கின்றது. இந்நிலையில் துபாயில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வேளையில் அங்கு இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று முகமது கைப் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

- Advertisement -

ரோகித் சர்மா துவக்க ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடி மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தால் விராட் கோலியால் அந்த அடித்தளத்தை வைத்துக்கொண்டு அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்து சென்று வெற்றிகளை பெற்று தர முடியும். துபாய் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 10 போட்டியில் 198 ரன்கள் தான் சராசரி ஸ்கோராக இருந்துள்ளதால் இந்திய அணி துபாயில் பேட்டிங் செய்ய சற்று சிரமத்தை எதிர்கொள்ளும்.

இதையும் படிங்க : ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: தனது வெய்ட்டான இந்திய அணியின்.. பிளேயிங் லெவனை வெளியிட்ட அஸ்வின்

ஆனால் மைதானத்தின் தன்மையை கணித்து சீனியர் வீரர்கள் தங்களது பங்களிப்பை வழங்கினால் நிச்சயம் இந்திய அணியால் 300 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும். இதனால் அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினால்தான் துபாயில் இந்திய அணி வெற்றி பெறும் என கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement