சென்னை டெஸ்ட் : கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் – காரணம் இதுதான்

Burns
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இன்று சென்னை மைதானத்தில் துவங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர் பர்ன்ஸ் 33 ரன்களிலும், சிப்லி 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Burns 1

- Advertisement -

மேலும் 3 ஆவதாக களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் குவித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் நாளைய போட்டியில் இன்னும் அவர் ரன்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. தற்போது அதற்கான காரணத்தை நாங்கள் இந்த பதிவில் விவரித்துள்ளோம். அதன்படி இங்கிலாந்தைச் சேர்ந்த கேப்டன் சர் டாம் என்ற போராட்ட தியாகிக்காக இந்த கருப்பு பட்டை அணிந்து விளையாடியுள்ளனர்.

Root

நூறு வயதான கேப்டன் சர் டாம் இந்த வாரம் கோவிட் பாதிப்பினால் உயிரிழந்தார். அவரது இரங்கலை முன்னிட்டு அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் இந்த மரியாதையை செய்துள்ளனர். தற்போது இந்த விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bumrah

அவ்வப்போது வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதற்கு ஒரு காரணம் இருக்கும் வேளையில் தற்போது இங்கிலாந்து வீரர்கள் துக்கத்தை அனுசரித்து உள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement