இம்முறை ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற அதிகம் வாய்ப்புள்ள அணி இதுதான் – 3 காரணம் இதுதான்

Iyer

ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணி 4 முறையும், சென்னை அணியை மூன்று முறையும் கொல்கத்தா இரண்டு முறையும் கோப்பையை வென்று இருக்கிறது. மற்ற அணி எல்லாம் இந்த அணிகளுடன் எவ்வாறு போட்டியிடுவது என்பதற்காகவே தங்களை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த முறையில் உருவாக்கப் பட்டிருக்கும் டெல்லி கேப்பிடல் அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த அணி வெற்றி பெற சாதகமாக இருக்கும் 3 காரணங்களை தற்போது பார்ப்போம்

Dhawan

இந்திய வீரர்கள் அதிகம் :

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இந்திய வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ,அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, என ஒரு மிகப்பெரிய இந்திய பட்டாளம் இருக்கிறது . அதனை தாண்டி ரவிச்சந்திரன் அஸ்வின், அஜின்கியா ரஹானே போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் அனுபவமும் இந்த அணி கோப்பையை பெற்று தர வாய்ப்பு இருக்கிறது.

Iyer

திறமையான இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் :

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு கேப்டனாக மாற்றப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. ஐந்து வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் . தற்போது அனுபவம் வாய்ந்தவராக மாறிவிட்டார். ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இவரை வழிநடத்துகிறார். ஒரு கேப்டனாக இவர் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்

Ishanth

பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் :

தற்போது இருக்கும் ஐபிஎல் அணிகளில் டெல்லி அணி பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாக இருக்கிறது இந்த அணியில் காகிசோ ரபாடா, இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்சர் படேல், சந்தீப் லாம்ச்சினே, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பல பந்துவீச்சாளர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்களும் வெற்றியைத் தேடித் தர காத்துக்கொண்டிருக்கிறார்கள்.