தீபக் ஹூடாவின் இந்த பேயாட்டத்திற்கு காரணம் மும்பை வீரர் மேல் உள்ள வெறுப்பு தானாம் – விவரம் இதோ

hooda 1

இந்த ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும்போது ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. அது என்னவென்றால் கிறிஸ் கெய்ல் அவுட்டாகி வெளியேறியப் பின்னர் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிகோலஸ் பூரான் உள்ளே வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் பேட்டிங் ஆட வந்தவரோ தீபக் ஹூடா.

Hooda-2

உள்ளே வந்த தீபக் ஹூடா முதல் பந்திலிருந்தே அட்டாக்கிங் செய்ய ஆரம்பித்தார். ராஜஸ்தான் அணி வீசிய பந்துகளை பவுண்டரியும், சிக்ஸர்களாக மாற்றிய ஹூடா அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கடைசியில் அவர் 28 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடக்கம். இவரின் இந்த அதிரடியான ஆட்டத்தைக் கண்ட நெட்டிசன்கள் இந்த அதிரடிக்கு காரணம் அவர் பட்ட அவமானமே என்று கூறி வருகின்றனர்.

இந்தியாவில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி t20 தொடரில் தீபக் ஹூடா பரோடா அணிக்காக விளையாடினார். பரோடா அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் க்ருணால் பாண்டியா. சையது முஷ்டாக் அலி தொடர் நடந்து கொண்டிருந்தபோதே நிர்வாகத்திற்கு தீபக் ஹூடா ஒரு கடிதம் எழுதினார்.

hooda

அக்கடிதத்தில், க்ருணால் பாண்டியா தன்னை தரக் குறைவாக நடத்துவதாகவும், மற்ற வீரர்களின் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். ஆனால் பரோடா அணி நிர்வாகமோ அவர் வைத்த குற்றச் சாட்டை விசாரிக்காமல் தொடரின் பாதியிலேயே அவரை அணியிலிருந்து நீக்கியது.

- Advertisement -

krunal 2

அன்று க்ருணால் பண்டியா தன்னை அவமானப்படுத்தியதால்தான் இன்று தீபக் ஹூடா இப்படி பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். இன்னும் மும்பை மேட்சில் படுபயங்கரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை அவமானப்படுத்திய க்ருணால் பாண்டியாவிற்கு பதிலடி கொடுப்பார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.